
எதிர்வரும் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமுகமளிக்காமல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் 25 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்லவும் மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரவும் தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் 21ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில் தொழிற்சங்கங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.





