
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் 200மாணவர்களுக்கு குறைவாக உள்ள ஆரம்ப வகுப்புகளைக்கொண்ட 588பாடசாலைகள் மட்டுமே எதிர்வரும் 21ஆம் திகதி திறக்கப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்துள்ளதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளைநாயகம் தெரிவித்தார்.
மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் திறக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை. மாறாக மாகாணத்திலுள்ள வகை 3 ஜச்சேர்ந்த 346 பாடசாலைகளும் இஏனைய வகை 2 இ1சிஇ 1ஏபி வகை பாடசாலைகளில் 200மாணவர்களுக்குகுறைவாகஉள்ள ஆரம்பபிரிவைக்கொண்ட 242 பாடசாலைகளுமாகஇ மொத்தம் 588பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
200மாணவர்களை விடக்கூடுதலான மாணவர்களைக்கொண்ட ஆரம்பப்பிரிவை உடைய பாடசாலைகள் 21ஆம் திகதி திறக்கப்படமாட்டாது.






