
செ. டிருக்ஷன்
நாட்டில் ஏற்பட்டிருக்கும் இரசாயன உரமின்மை பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி, அம்பாறை மாவட்டத்திலுள்ள சவளக்கடை பிரதேசத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் .த.கலையரசன் தலைமையில் சவளக்கடை கமநல சேவைகள் நிலையத்துக்கு முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச்செயலாளர் .அ.நிதான்சன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களான சுதர்ஷன், நிரோஷன், திருமதி.தர்ஷினி ஆகியோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சிவலிங்கம், செல்வநாயகம், குபேரன் மற்றும் அப்பிரதேசத்தினைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் கலந்துகொண்டனர்.






