லா லிகா: வெலன்ஸியா அணியை வீழ்த்தி பார்சிலோனா அணி வெற்றி!

லா லிகா கால்பந்து லீக் தொடரில், பார்சிலோனா அணி சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து லீக் தொடரில், தற்போது ஒன்பதாவது கட்டப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இதில் கேம்ப் நவ் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், பார்சிலோனா அணியும் வெலன்ஸியா அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில் பார்சிலோனா அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

இதில் பார்சிலோனா அணி சார்பில், அன்சு பெஃடி 13ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மெம்பிஸ் டிபே 41ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும், பிலிப்பே கோன்டினோ 85ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

வெலன்ஸியா அணி சார்பில், ஜோஸ் காயா 5ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், புள்ளிப்பட்டியலில் பார்சிலோனா அணி 15 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் வெலன்ஸியா அணி 12 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.

Leave a Reply