கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணி 5 ஏக்கரை கடற்படையினருக்கு அளவீடு செய்து வழங்க எடுத்த முயற்சி பொது மக்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இந்து காலை, அளவீட்டு பணிக்காக நில அளவையாளர்கள் அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், கடற்படைக்கு காணி வழங்க எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply