எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்ட தினத்தில் , ஆசிரிய – அதிபர்கள் போராட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
அத்துடன், பாடசாலை ஆரம்ப தினத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளை புறக்கணிப்பதற்கும் ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகளில் அதிபர்கள் – ஆசிரியர்கள் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கான அழைப்பை விடுத்துள்ளனர்.
எனினும், அதிபர் − ஆசிரியர்கள் ஒக்டோபர் மாதம் 25ம் திகதி பாடசாலைகளுக்கு செல்லவதற்கு தீர்மானித்துள்ளனர்.
பாடசாலை ஆரம்ப தினத்தில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதா? இல்லையா? என்பது குறித்து ஆசிரியர் தொழில்சங்கங்களுக்கு இடையில் இன்று (28) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






