விவசாயிகள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி வடக்கு கிழக்கில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச விவசாயிகள் இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அதில் ஓர் அங்கமாக துணுக்காய் – பாண்டியன்குளம் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் துணுக்காய் மற்றும் பாண்டியன்குளம் கம நல சேவை நிலையங்கள் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில், கொல்லாதே கொல்லாதே விவசாயிகளை கொல்லாதே! விவசாயிகளுக்கான உரம், கிருமிநாசிகளை போதியளவு கிடைக்க வழி செய்! உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை பாண்டியன்குளம் கமநலசேவை நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளினால் பிரதேச விவசாய போதனாசிரியரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.



விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுவேண்டி கீரிமலையில் கவனயீர்ப்பு!
முகமாலையில் இனந்தெரியாத குழுவினரால் சரமாரியாக தாக்கப்பட்ட நபர்!
அடுத்த இரு வாரங்களில் அனைத்து வகை அரிசிகளுக்கும் விலை அதிகரிப்பு!





