காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பம்!

2022ம் ஆண்டின் ஆரம்பத்தில் புதிய காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை நிர்மாணப்பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏக்கநாயக்க (Gamini Ekanayake) இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் 725 ஏக்கர் நிலத்தை அங்கீகரிக்கவும், இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 185 ஏக்கர் நிலத்தில் இருந்து அவர்கள் விலகிச் செல்ல அழைப்பு விடுத்தும் தாக்கல் செய்யப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு பெப்ரவரி 8ம் திகதி அமைச்சரவை பத்திரத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு, 100 க்கும் பழைய இயந்திரங்களை அகற்றும் பணிகள் ஆரம்பித்துள்ளன.

அதிகாரப்பூர்வமாக குறித்த இடத்தில் இருந்து விலகிச் செல்லுமாறு இராணுவத்திடம் கூறவில்லை. என்றாலும், 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வளாகத்தில் புதிய கே.கே.எஸ் சீமெந்து தொழிற்சாலை கட்டப்படும் போது அவர்கள் அங்கிருந்து வெளியேவார்கள் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம்! தமிழக பொலிஸார் எச்சரிக்கை

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுவேண்டி கீரிமலையில் கவனயீர்ப்பு!

முகமாலையில் இனந்தெரியாத குழுவினரால் சரமாரியாக தாக்கப்பட்ட நபர்!

அடுத்த இரு வாரங்களில் அனைத்து வகை அரிசிகளுக்கும் விலை அதிகரிப்பு!

கொல்லாதே கொல்லாதே விவசாயிகளை கொல்லாதே! துணுக்காய் பிரதேச விவசாயிகளும் போராட்டம்

Leave a Reply