நேருக்கு நேர் மோதிய லொறிகள்! விபத்தில் சிக்கிய ஐவரின் நிலை?

புத்தளம் – முந்தலம் மங்களஎளிய பிரதேசத்தில் இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு விபத்துக்கு உள்ளான லொறிகளில் இருந்த ஐவர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்று முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது,

நேற்று மாலை, மரக்கறிகளை ஏற்றிச்சென்ற லொறியும் கோழி உரத்தை ஏற்றி சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறிகளை ஏற்றி சென்ற லொறியும் நவடன்குளத்திலிருந்து நுரைச்சோலை நோக்கி சென்ற லொறியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்தில் இரு லொறிகளின் சாரதிகளும் மற்றும் லொறியில் பயணித்தவர்களுமே படுகாயமடைந்துள்ளனர்.

எனினும், விபத்தில் காயமடைந்தவர்கள் பிரதேச மக்களின் உதவியுடன் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் இரு லொறிகளும் பாரியளவில் சேதமடைந்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply