காஷ்மீரில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் வெளியேறி வருவதாக அறிவிப்பு!

காஷ்மீரில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் நீடித்து வருவதால் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி இந்த மாதத்தில் மாத்திரம் இதுவரை 11 பேர் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொல்லப்பட்ட 11 பேரில் 5 பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பதால், வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறி வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட காடுகளில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply