தமிழ் மொழி பயிற்சிக்காகக் வந்த இராணுவ சார்ஜன்ட் திடீர் மரணம்

வெல்லவாய இராணுவ முகாமில், தமிழ் மொழி மூலப் பயிற்சிக்காக வருகைத் தந்த இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவர், திடீரென உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், குறித்த இராணுவ அதிகாரி அவரது அறையிலேயே உயிரிழந்துள்ளார் என வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

53ஆவது படையணியின் 6ஆவது பாபல ரெஜிமென்ட்டின் மிஹிந்தலை முகாமில் கடமையாற்றிய 49 வயதுடைய இராணுவ அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இராணுவ அதிகாரி உள்ளிட்ட மேலும் சில இராணுவ அதிகாரிகள் குழுவொன்று, 2 மாதங்களுக்கு முன்னர், தமிழ் மொழி மூலப் பயிற்சிக்காக வெல்லவாய- வருணகம இராணுவ முகாமுக்கு வருகைத் தந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நித்திரைக்குச் சென்ற இராணுவ மேஜர், நேற்று மாலை வரை அறையிலிருந்து வெளியே வராமையால், அவர் தங்கியிருந்த அறை திறந்து பார்க்கப்பட்டுள்ளது.

இதன்போது கட்டிலுக்கு அருகில் விழுந்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவரின் மரண விசாரணைகள் இன்று வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் இடம்பெறும் என வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply