எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு ஆசிரியர்கள் வருகை தராவிடின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணியிலமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்,
2 நாட்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயன்படுத்தி அவர்களிற்கான விளையாட்டு, கலை பாடங்களை புகட்டக் கூடிய திறமை வாய்ந்த உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களில் உள்ளனர்.
நீண்ட நாட்கள் இடைவெளியின் பின்னர் பாடசாலைக்கு திரும்பும் மாணவர்களை அன்புடன் வரவேற்க வேண்டும்.
அன்றைய தினத்தில் ஆசிரியர்கள் சமூகமளக்காவிடின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயன்படுத்தி அவர்களிற்கான விளையாட்டு, கலை பாடங்களை கற்பிக்க முடியும்.
அனைத்து பிரதேச செயலாளர்களும் பாடசாலை நடவடிக்கைகளை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வர் என கலந்துரையாடலின் போது மேலும் தெரிவித்தார்.






