முல்லைத்தீவில் கிணற்றிற்குள் வீழ்ந்த காட்டுயானை!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட ஒதியமலை கிராமத்தில் விவசாய கிணற்றில் வீழ்ந்த காட்டுயானை ஒன்று வனஜீவராசிகள் திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது.

ஒதியமலை பகுதியில் தோட்டம் செய்யும் 20 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் காட்டுயானை விழுந்து கிடப்பதை கண்ட விவசாயி, கிராம சேவையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காலை 10.00 மணிக்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கனரக இயந்திரங்கள் கொண்டு யானையினை கிணற்றில் இருந்து மீட்டுள்ளார்கள்.

அலியன் எனப்படும் தனியானையே இவ்வாறு கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது.

இதேவேளை, ஒதியமலை கிராமத்தில் யானைவேலி இல்லாத நிலையில் நாளாந்தாம் காட்டுயானையால் விவசாய விளைநிலங்கள் அழிக்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்

Leave a Reply