பாடசாலை மாணவர்களுக்கு திரவ பால் வழங்குவதை நிறுத்தி, உள்ளூர் அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு கிளாஸ் கஞ்சியை வழங்க முடிவு செய்துள்ளதாக பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 927 பாடசாலைகளில் உள்ள 400,000 மாணவர்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை கஞ்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட செய்முறையை பயன்படுத்தியே இந்தக் கஞ்சி தயாரிக்கப்படப் போவதாகவும் இதனை ஒரு தனியார் நிறுவனத்திம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கிளாஸ் பாலினை வழங்க செலவழித்த விலைக்கு, ஒரு கிளாஸ் கஞ்சியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக 650 மில்லியன் ரூபாய் செலவிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த பால் விநியோகஸ்தர்கள் அழைக்கப்பட்டிருந்தாலும் இதற்கு எந்த நிறுவனமும் முன்வராத நிலையிலேயே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.






