நோய் அறிகுறிகள் தென்படாத கொரோனாத் தொற்றாளர்களை சமூகத்தில் அதிகளவில் அடையாளம் காண முடிந்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், மீண்டும் ஒரு முறை கீழ் மட்டத்தில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது அதிகரிப்பை காட்டுவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும், இந்நிலைமை காரணமாக மிக விரைவில் சாதாரண மக்கள் மத்தியில் அங்காங்கே கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாத நிலைமையை காணக் கூடியதாக உள்ளது.
இது தொடர்ந்தால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சிரமமான மட்டத்திற்கு மிகப் பெரிய கொரோனா அலைகள் ஏற்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






