காவல்துறை அமைச்சருக்கோ, வேறு எந்த அமைச்சருக்கோ அரச அதிகாரிகளை மிரட்ட அதிகாரம் கிடையாது என்று கூட்டு அபிவிருத்தி அதிகாரிகள் மையம் மற்றும் கூட்டுப் பயிற்சியாளர் சங்கத்தின் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரச அதிகாரிகளை மிரட்டும் அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். இத்தகைய அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அரசாங்க அதிகாரிகளை மிரட்டிய அமைச்சர்களுக்கு என்ன நடந்தது என்பதை சமீபத்தில் பார்த்தோம். எனவே, அமைச்சர் சரத் வீரசேகரவும் இது தொடர்பாக பாடம் கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக நான் நினைக்கிறேன்.
பொது சேவையில் பணியாற்றும் அதிகாரிகள் சுதந்திரத்துடன் செயற்பட வேண்டும் எனவும், சட்டத்தை மதிக்கும் சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்காக அமைச்சர் சரத் வீரசேகர கொண்டு வந்த கருத்துக்களை அவரே உடைகின்றார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






