வீழ்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இலங்கை முதல் இடத்தில்! – ராஜித சேனாரத்ன

இந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கையின் பொருளாதாரம் சரிந்து வீழ்ச்சிடைவதோடு, ஆதரவற்ற நாடாகவும் மாறும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், ஆதரவற்ற நாடாக இலங்கை மாறினால், நாட்டில் எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் வீழ்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இலங்கை முதல் இடத்தில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply