விவசாய சமூகத்திற்கு தரமான உரத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாட்டில் பஞ்சமும் தீவிர கலவரங்களும் ஏற்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், சேதன உரங்களைக் கொண்டு விவசாயத்தை மேற்கொள்ள முடியாது என்பதில் தோல்வியடைந்த, ஜனாதிபதியும் விவசாய அமைச்சரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இதன் விளைவாக, ஜனாதிபதி கோட்டாபய மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகள் நாட்டில் பஞ்சத்திற்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல் தீவிர கிளர்ச்சி மற்றும் சமூக பிளவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






