இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக 223 நட்சத்திர ஆமைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முயற்சித்த இந்திய பிரஜைகள் இருவர் உட்பட மூவருக்கு 330,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக டி சில்வா முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகின்றது.
இந்தியாவின் புது டெல்லியைச் சேர்ந்த குறித்த இருவரும், கொட்டிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடன் அண்மையில் நீர்கொழும்பு – கொப்பரா வீதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் இதன்போது அவர்களிடம் இருந்து நட்சத்திர ஆமைகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சேதன பசளை தொடர்பான திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான முதலீட்டாளர்களாக அவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை விசாரணையின்போது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






