இலங்கை வங்கி…

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் – இலங்கை வங்கி கிளையால் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு High Flow Oxygen Ventilator அன்பளிப்பு

-கேதீஸ்-

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் – இலங்கை வங்கி கிளையின் நிதிப்பங்களிப்பில் (BOC) கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இயந்திரம் High Flow Oxygen Ventilator இன்று (18.10.2021) அன்பளிப்பு செய்யப்பட்டது.

வைத்தியட்சகர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரனின் தலைமையில் சுகாதார நடைமுறைகளுடன் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் பாலித்த எட்டம்பாவல (CBEU) ,செயலாளர் பி.எச். உதய இமல்சா, உப தலைவர் அனுராத நிராஜ், சிரேஷ்ட்ட உதவிச் செயலாளர் D.B கார்த்திக், கல்முனை பிராந்திய தொற்றுநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி ந.ரமேஷ், கல்முனை ஆதார வைத்தியசாலையின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வைத்திய பொறுப்பதிகாரி ஜெ.மதன் உட்பட இலங்கை வங்கி ஊழியர் சங்க பிரதிநிதிகள், வைத்தியசாலை உத்தியயோகத்தர்கள், கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அதிபரும் பழைய மாணவர் சங்க தலைவருமான அருட்சகோதரர் சந்தியாகு, பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலைய தலைவரும் பாண்டிருப்பு மகாவித்தியாலய அதிபருமான சி.புனிதன், கல்முனை டொல்பின் விளையாட்டுக்கழக முகாமையாளர் ந.சபேஷ், A.H.M மார்க்கட்டிங் நிறுவன தலைவர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

குறித்த இயந்திரம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கிடைப்பதற்கு முழு மூச்சாக செயற்பட்ட இப்பிரதேசத்தைச் சேர்ந்த இலங்கை வங்கி உத்தியோகத்தர் தனுபாலரெட்ணம் பிரபாகர் நன்றியுரை நிகழ்த்துகையில்,

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தால் இரண்டு High Flow Oxygen Ventilator இயந்திரங்கள் முதற்கட்டமாக இலங்கையில் வழங்கி வைக்கப்பட்டன. ஒன்று இங்குராங்கொட சிறுவர் வைத்தியசபாலைக்கும் ,இரண்டாவது கல்முனை ஆதார வைத்தியசாலைக்கும் கிடைத்துள்ளது.

இதனை எமது வைத்தியசாலைக்கு வழங்கி வைத்த இலங்கை வங்கி ஊழியர் சங்க பிரதிநிதிகளுக்கும் நிதிப்பங்களிப்பு செய்த அனைவருக்கும் ,முயற்சி செய்தபோது உரிய ஒத்துழைப்பை வழங்கி கோரிக்கை கடிதம் ,அதற்கான ஆவணங்களை துரிதமாக தந்துதவிய வைத்திய அத்தியட்சகர் Dr.இரா.முரளீஸ்வரன் அவர்களுக்கும், மற்றும் பிராந்திய தொற்று நோய் பொறுப்பதிகாரி Dr.ந.ரமேஸ் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கும் எமது ஊழியர் சங்கத்துடன் இணைந்துகொண்டு நிதிப்பங்களிப்பு செய்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்துக்கும்;, பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்துக்கும் ,கல்முனை டொல்பின் விளையாட்டுக்கழகத்துக்கும் ,அக்கரைப்பற்று ஏ.எச்.எம். மார்க்கட்டிங் நிறுவனத்தாருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

Leave a Reply