பொதுப் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதன் ஊடாக மீண்டும் கொரோனா வைரஸ் பரவலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனாத் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிபதை ஒத்திவைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கவனயீனமாக இருப்பதை அவதானித்து கவலையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






