புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகள் நிறைவு!

இலங்கையில் புதிய அரசமைப்பு உருவாக்கும் பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் வருடம் ஜனவரி மாதத்தில், புதிய அரசமைப்பு உருகாக்கும் பணிகளை முடிவுறுத்தி அதன் வரைபை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்பார்த்துள்ளேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கொள்கைப் பிரகடனத்தில், புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி அமுல்படுத்துவதாக மக்களுக்கு உறுதியளித்திருந்தார்.

தற்போதுள்ள அரசமைப்பு ஜே.ஆர். ஜயவர்தனவின் யுகத்தில் 1978 ஆம் ஆண்டில் உருவானது. 43 வருடங்கள் இப்போதாகின்றன.

இந்த தசாப்தங்களில் பல்வேறு அழிவுகளை எமது சமூகம் சந்தித்துள்ளது.

அரசமைப்பு என்பது நாட்டின் சட்டமாகும். நாட்டின் சுபாவம், அவசியம் என்பன மாற்றமடைகின்ற வகையில் இது மாற்றமடைய வேண்டும்.

அரசமைப்பை உருவாக்குவதற்கு ஜனாதிபதி இந்த நாட்டின் புகழ்பெற்ற சட்டத்தரணி, நிபுணர்களுடைய குழு ஒன்றை நியமித்தார்.

அதன் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா உள்ளார். அந்தக்குழுவின் பணிகள் நிறைவடைந்துள்ளன.

புதிய அரசமைப்பு வரைபும் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது, சட்டமா திணைக்களத்திற்கு அதன் இறுதி வரைபை ஏற்பாடு செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்திற்கு முன்வைக்க முடியும் என நம்புகிறேன். புத்தாண்டில் புதிய அரசமைப்பு மீது கவனம் செலுத்தும் வாய்ப்பு நாடாளுமன்றத்திற்குக் கிடைக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply