வடக்கில் 20 பேருக்கு கொரோனா தொற்று..!

Coronavirus. COVID-19. 3D Render

யாழ்ப்பாணத்தில் 10 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் இன்று இருபது பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 159 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், சாவகச்சேரியில் 04 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவர், யாழ்ப்பாணம் நொதேர்ன் வைத்தியசாலையில் ஒருவர், ஊர்காவற்றுறையில் ஒருவர், பருத்தித்துறையில் ஒருவர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர் என யாழ் மாவட்டத்தில் 10 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்தோடு , வவுனியாவில் 05 பேர், கிளிநொச்சியில் ஒருவர், மன்னாரில் 02 பேர் முல்லைத்தீpல் 02 பேர் ஆகியோருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Leave a Reply