ரஜனிகாந்தின் திரைப்படப் பாடலிற்கு நாதஸ்வர இசை வழங்கிய ஈழத்துக் கலைஞன் கே.பி.குமரனை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கௌரவித்துள்ளார்.
குறித்த நிகழ்வு சாவகச்சேரியில் உள்ள சங்கத்தானை அம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
சூப்பஸ்ரார் ரஜனிக்காந்தின் 168 ஆவது படமாகிய அண்ணாத்த திரைப்படத்தில் இடம்பெறும் பாடலொன்றிற்கு, இமான் இசை அமைப்புடன் இணைந்து, நாதஸ்வர இசை வழங்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாதஸ்வர வித்துவான் கே.பி.குமரனே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார்.







