மின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

மின்பாவனையாளர்களுக்கு நிலுவைக்கட்டணம் தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மின் பாவனையாளர்கள் தமது மின் நிலுவை கட்டணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

மேலும் இதனை கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், மாளிகைக்காடு, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச மின் பாவனையாளர்கள் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தாமதிக்காது செலுத்துமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply