நெனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி!

நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விசேட திரவ உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும், 9 இலட்சம் ஹெக்டேருக்கு தேவையான திரவு உரத்திற்கே இவ்வாறு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 3.1 மில்லியன் லீற்றர் விசேட திரவ உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அதன் முதல் தொகுதியாக 1 இலட்சம் லீற்றர் விசேட திரவ உரம் இன்று இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply