சர்வதேச நாடுகளால் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுவதால், உலகில் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொருட்களின் விலையை அதிகரிக்காமல் வைத்திருப்பது சாத்தியமில்லை என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில், நாட்டில் பொருள்களின் விலையை குறைவாக வைத்திருப்பது எப்படி என்று தெரிந்த ஒரு பொருளாதார வல்லுநர் இருந்தால் அவர் எங்களுக்கு அந்த வழிமுறையை சொல்லி தாருங்கள்.
எரிபொருள், எரிவாயு மற்றும் பால் மா போன்ற பொருட்களின் விலைகள் நிர்ணயிக்கப்படுவது நம் நாட்டால் அல்ல, சர்வதேச சந்தையால்.
எனவே, உலக சந்தையில் இந்த பொருட்களின் விலைகள் உயரும் போது இலங்கையிலும் அரசாங்கம் இத்தகைய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.






