சீனி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு பல முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சீனி இறக்குமதியாளர்கள் 10 பேரின் கையொப்பத்துடனான கடிதத்தில் சீனியின் கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறும், ஒரு கிலோ சீனிக்கு 25 ரூபாய் விலை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டாலும், சந்தையில் சீனியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது என சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் சீனியின் இருப்புக்கள் மறைக்கப்பட்டதால் ஒரு கிலோ சீனியின் விலை ரூ.230 ஆக கடுமையாக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.






