சுகாதர அமைச்சருடன் தகராறு: பதவி விலகும் சுகாதார அதிகாரிகள்?

அரச மருந்துவ நிறுவனத்தில் உள்ள இரண்டு உயர் பதவிகள் அடுத்த சில நாட்களில் வெற்றிடமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரச மருந்து நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பிரசன்ன குணசேன மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் லலித் ஜெயக்கொடி ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இத்தகைய அதிகாரிகளின் திடீர் இராஜினாமா சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

சுகாதார அமைச்சருடனான தகராறு காரணமாகவே மருந்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரின் திடீர் இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில வாரங்களில் இந்த உயர் அதிகாரிகள் நாடாளுமன்ற அமைச்சரால் பல சமயங்களில் தவறாக வழிநடத்தப்பட்டமையாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply