திருமலையில் வீடுகளை உடைத்த யானைகள்!

திருகோணமலை, மஹதிவுல்வௌ பிரதேசத்தில் யானையின் தாக்குதலால் பல வீடுகள் சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம், இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

அத்துடன், வீட்டுக்குள் இருந்த ஒரு தொகை நெல்லை யானைகள் உட்கொண்டுள்ளது.

இதனால், தாம் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply