2000 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இதில், ஊடகவியலாளரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், யாழ். மாநகர சபை முதல்வர் வீ.மணிவண்ணன், கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் நிரோஷ; மற்றும் ஊடகவியலாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.







