கொரோனா தொற்றால் மரணித்தோர் எண்ணிக்கை 13,525ஆக உயர்வு!

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13ஆயிரத்து 525 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 09 பெண்களும் 09 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply