திருமலையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

திருகோணமலை, கந்தமலாவ பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரிடமிருந்து 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கோமரங்கடவல, கந்தமலாவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய என்.ஏ.டிலான் தீக்ஸன என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில் தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞனை, திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply