வவுனியாவில் 80 பேருக்கு இழப்பீட்டு காசோலைகள் வழங்கிவைப்பு!

கடந்த காலத்தில் யுத்தம் காரணமாக இன்னல்களுக்குள்ளான குடும்பங்களுக்கு இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில், தெரிவு செய்யப்பட்ட 80 குடும்பங்களுக்கு இக் காசோலைகள் வழங்கப்பட்டது.

அத்துடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கிணங்க, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நிதி ஒதுக்கீட்டில் 20 கோயில்களுக்கான நிதியும் இன்று வழங்கப்பட்டுள்ளது.

அதில், 18 கோயில்களுக்கு ஒரு லட்சமும், 2 கோயில்களுக்கு 2 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான குலசிங்கம் திலீபன், வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு காசோலைகளை வழங்கி வைத்தனர்.

Leave a Reply