கொரோனா பரவல் நிலை இன்னும் முழுமையாகத் தணியவில்லை. எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி வரையிலாவது சுகாதார வரையறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், நாடு திறக்கப்பட்டுள்ளது என்றாலும், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துத் தடை இன்னமும் நீக்கப்படவில்லை.
புதுவருடத்தின் பின்னர் இடம்பெற்ற தேவையற்ற சுற்றுலாப் பயணங்களின் காரணமாகவே கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டது.
கடந்த கால நிலைமைகள் தொடர்பில் சிந்தித்து மக்கள் செயற்பட வேண்டியது மிகவும் அவசியம் என அவர் தெரிவித்தார்.






