குருநாகல், குளியாப்பிட்டிய எம்பவ பிரதேசத்தில், நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 19 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத் திருமண நிகழ்வு குளியாப்பிட்டிய கரகஹகெதர பிரதேசத்திலுள்ள மண்டபமொன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில், பங்கேற்ற அனைவரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதில், 35 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், 19 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்று முற்றாக நீங்கிவிட்டது என்று நினைத்து மக்கள் செயற்படுவதால் மீண்டும் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என குளியாப்பிட்டிய பொதுசுகாதார வைத்திய அதிகாரி உத்பல சங்கப்ப தெரிவித்துள்ளார்.






