முல்லைத்தீவில் பணியாற்றி வருகின்ற ஊடகவியலாளர்களின் அமைப்பான ஊடக அமையத்திற்கான புதிய அலுவலகம் நாளை திறந்துவைக்கப்பட உள்ளது.
அந்தவகையில், கட்டடத்தை சூழ இராணுவப் புலனாய்வாளர்கள், சிவில் உடை தரித்த பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சிவில் உடை தரித்த பொலிஸார் அங்கு சென்று, நாளைய நிகழ்வு தொடர்பாகவும், யார் வருகிறார்கள் எனவும் ஊடகவியலாளர்களிடம் விசாரித்து சென்றுள்ளனர்
குறித்த ஊடக அமையம் நாளை காலை 9 மணிக்கு கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன், யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் தலைவர் கலாநிதி எஸ் ரகுராம் மேலும் பல அதிதிகளும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







