
ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இரண்டரை ஆண்டுகள் பூர்த்தியாகுவதை முன்னிட்டு வியாழக்கிழமை (21) உயிரிழந்தவர்களுக்கான விசேட நினைவு வழிபாடுகளை நடத்த கொழும்பு மறைமாவட்ட ஆயர் இல்லம் தீர்மானித்துள்ளது.
மேலும் கொழும்பு பேராயர் மெல்கம் கார்டின் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விசேட நினைவு வழிபாடானது அன்றைய தினம் காலை 9 மணி முதல் காலை 10 மணி வரை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இதனையடுத்து அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு நீர்கொழும்புஇகட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்திலும் விசேட நினைவு வழிபாடுகள் பேராயரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.





