கொழும்பு நகரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
கடந்த நான்கு நாட்களில் கொரோனாவால் எவரும் உயிரிழக்கவில்லை என கொழும்பு மாநகர தலைமை மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கொழும்பில் ஜந்து நோயாளிகளே நாளாந்தம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாளாந்தம் நாங்கள் 220 பிசிஆர் சோதனைகளையும் 300துரித அண்டிஜன் சோதனைகளையும் முன்னெடுக்கின்றோம். இவற்றில் .இரண்டு வீதத்திற்கும் குறைவானவர்களே நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதால் கொரோனா வைரஸ் மீண்டும் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.






