கேரளாவில் சீரற்ற காலநிலையில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

<!–

கேரளாவில் சீரற்ற காலநிலையில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! – Athavan News

கேரளாவில்  தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்டவற்றில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மழை காரணமாக 90 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், 702 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கை நாளைய தினம் வரையில் நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply