ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்து: டீசலுக்கு 35, பெட்ரோலுக்கு 18 ரூபாய் இழப்பு என்கின்றார் கம்மன்பில

<!–

ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்து: டீசலுக்கு 35, பெட்ரோலுக்கு 18 ரூபாய் இழப்பு என்கின்றார் கம்மன்பில – Athavan News

3.6 பில்லியன் டொலர் கடனை ஓமானிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

20 வருட காலத்திற்குள் மீண்டும் அக்கடனை செலுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக எட்டப்படும் இந்த ஒப்பந்தம் மூலம் கடனைத் தீர்க்க ஐந்து வருட கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.

தற்போது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் டீசலுக்கு 35 ரூபாய் மற்றும் ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 18 ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


Leave a Reply