நாமல் உள்ளிட்ட குழுவினர் அடங்கிய முதல் விமானம் இந்தியாவுக்குப் பயணம்!

இந்தியாவின் குஷpநகர் சர்வதேச விமான நிலையம் இன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதற்கான முதலாவது விமானம் இலங்கையிலிருந்து இன்று அதிகாலை 5.20 மணியளவில் புறப்பட்டுச் சென்றுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 1147 என்ற விமானமே இவ்வாறு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பயணத்தில் பங்கேற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தின் 95 பௌத்த தேரர்கள் சென்றுள்ளனர்.

Leave a Reply