இந்த நேரத்தில் மாகாண சபை தேர்தலை நடத்தினால் அரசாங்கத்திற்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது! ஜகத் குமார

அரசாங்கத்தின் மீது மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதால் மாகாண சபை தேர்தலை இந்த நேரத்தில் நடத்த முடியாது என்றும், அதையும் மீறி நடத்தினால் அரசாங்கத்திற்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது என இலங்கை பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் மக்கள் விரக்தியிலும் குழப்பத்திலும் இருக்கின்றார்கள்.

எனவே, இந்த நேரத்தில் தேர்தலை நடத்த முடியாது. இன்னும் ஏழு முதல் எட்டு மாதங்கள் கடந்த பிறகு மாகாண சபை தேர்தலை நடத்துவது அரசாங்கத்திற்கு நன்மை பயக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply