காணாமற்போன இந்திய மீனவரின் சடலம் கடற்படையினரால் மீட்பு!

காரைநகர் கடற்பரப்பில் காணாமற்போன இந்திய மீனவரின் சடலம் சற்று முன்னர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

காரைநகர் கடற்பரப்பிற்குள் நேற்று ஊடுருவிய இந்திய மீன்பிடிப் படகை கடற்படையினர் கைது செய்ய முயன்ற வேளை, கடற்படையினரினதும், மீனவர்களதும் படகு மோதியதில் இந்திய மீனவர்களின் படகு நொருங்கி கடலில் மூழ்கியது.

இதன்போது, படகில் இருந்த மூவரில் இருவர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். ஒருவர் காணாமல் போயிருந்தார்.

இவ்வாறு காணாமல்போன இந்திய மீனவரின் சடலம் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை கொண்டுவரப்படும் உடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply