சம்பளத்தை குறைத்து காட்டுங்கள், அதன்பின் ஆசிரியர்களின் அதிகாரம் என்ன என்பதை நாங்கள் காட்டுகிறோம்!

ஒக்டோபர் 21 ஆம் திகதி பாடசாலைக்கு வராத ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பளம் நிறுத்தப்படும் என்ற தனது அறிக்கையை வடமேல் மாகாண ஆளுநர் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாண ஆளுனரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், சம்பளத்தை குறைக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு இல்லை.

21 ஆம் திகதி பாடசாலைகள் திறப்பது குறித்து பல அரசியல்வாதிகள் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்ற நிலையில் வடமேல் மாகாண ஆளுநரும் தன் பக்கத்தில் இருந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்த நாட்டின் ஆசிரியர்களின், குறிப்பாக வடமேல் மாகாணத்தின் ஆசிரியர்களின் சம்பளத்தை இல்லாமல் செய்ய ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். அதற்கெதிராக கடுமையான நடவடிக்கையை முன்னெடுப்போம்.

எனவே, ஆளுநரின் இந்த அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். எது எப்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் கண்டிப்பாக இந்த வேலைநிறுத்தத்தை 21 தொடக்கம் 22 ஆம் திகதிகளில் மீண்டும் தொடங்குவோம்.

முடிந்தால் ஆளுநர் கூறியது போல் நவம்பர் மாத சம்பளத்தை இல்லாமல் செய்து, உங்கள் சக்தியைக் காட்டுங்கள், பின்னர் ஆசிரியர்களின் அதிபர்களின் அதிகாரம் என்ன என்பதையும் நாங்கள் காண்பிப்போம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply