மினுவங்கொடயில் இருந்து 18 ஆம் கட்டை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்
33 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






