பொருட்களின் விலையை காட்டிலும் மக்களின் உயிர் முக்கியம் என்பதனாலேயே ஜனாதிபதி பொருட்களின் விலையை அதிகரித்துள்ளார் என நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், பொருட்களின் விலை ஓரளவுக்கு உயர்ந்துள்ள போதிலும், அது மக்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை.
பட்டினியைக் காட்டிலும் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவது முக்கியம் என்று நினத்ததால் தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொருட்களின் விலையை அதிகரித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் மக்களுக்கு கிடைக்கும் படி செய்து நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
ஜனாதிபதியின் நல்லுள்ளத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. நாம் அதை ஏற்று கொள்கின்றோம். அத்தியாவசிய பொருட்களுக்கான நெருக்கடிகள் பற்றாகுறைகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலே மக்களின் நலனை கருத்திற் கொண்டே அரசாங்கம் இத்தகைய விலை அதிகரிப்பை செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.






