சிறார்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த சட்டமூலத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இது சிறார்களுக்கு வழங்கப்படும் மரண தண்டனைக்கு பதிலாக தடுத்துவைக்கும் செயற்பாட்டை தண்டனையாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை நிறுவும் என்று நாடாளுமன்ற ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.