சபைக்கு வருகிறார் ஜனாதிபதி கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளைய தவறாது நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆளும் கட்சிக்குள் இருக்கும் கருத்து முரண்பாடுகள் தொடர்பில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply