கிண்ணியாவில் கைக்குண்டுடன் ஒருவர் கைது!

திருகோணமலை, கிண்ணியாவில் வெளிநாட்டுத் தயாரிப்பு கைகுண்டுடன் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பூவரசாந்தீவு, ஆர்.டி.எஸ் தெருவில் வசிக்கும் 29 வயதுடைய இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற இராணுவ பொறியியலாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், கைது செய்யப்பட்வரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply